Tuesday, August 21, 2012

Tamil BhagavadGita -06 ஸ்ரீ மத் பகவத்கீதை 


Srimad Bhagavad Gita 
அத்தியாயங்களின் சுருக்கம்

முதல் அத்தியாயம் [ அர்ஜுன விஷாத யோகம் ]

த்ருதராஷ்ட்ரரது வினா - சுலோகம் - 1
போருக்கு இருதரத்தாரும் அணிவகுத்திருப்பதை ஸஞ்ஜயர் விளக்குகிறார் 2-20 -
தன்னை எதிர்ப்பவர்களைக் காண அர்ஜுனன் தவிக்கிறான் 21-23 
அர்ஜுனன் எதிரிகளுக்குப் பதிலாக உறவினர்களையே காண்கிறான் 24-27 
அர்ஜுனனது தடுமாற்றம் 28-30 
அர்ஜுனனது போலி வேதாந்தம் 31-46.

இரண்டாம் அத்தியாயம் [ ஸாங்கிய யோகம் ]

ஸஞ்ஜய உவாச 1
பலவான் ஆவது குறிக்கோள் 2-3 
பெரியோரோடு போர் புரியேன் என்கிறான் அர்ஜுனன் 4-6
அருள் பெறுவதற்கு ஏற்ற மன நிலை 7-8 
ஸஞ்ஜய உவாச 9
அருள் சுரப்பதன் அறிகுறி 10
யோகத்துக்கு அஸ்திவாரம் 11
ஆத்மாவுக்கு அழிவில்லை 12
 மரணத்தின் கூறு 13
குளிரும் வெப்பமும் உடலுக்கு உண்டு 14-15 
ஸத் எது? அஸத் எது? 16-20
வினையில் பற்று அற்று இரு 21 
மறு பிறப்பு 22
ஆத்மா நிஷ்பிரபஞ்சப் பொருள் 23-25
ஆத்மா அழிகிறது என்றாலும் வருந்துவது பொருந்தாது 26-28
ஆத்மா மனம் மொழிக்கு எட்டாதது 29-30
கடமையினின்று வழுவலாகாது 31-37 
கர்மத்தைக் கர்மயோகமாக்கு 38-41 
உலகத்தவர் போக்கு 42-44
யோகத்துக்குத் திறவுகோல் 45-53 
நிறைஞானியின் லக்ஷணம் 54-72.

மூன்றாம் அத்தியாயம் [ கர்ம யோகம் ]

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயம் 1-2 
ஒன்றை ஒன்று அனுசரித்து இரண்டு மார்க்கங்கள் உள 3-8 
யக்ஞத்தின் சிறப்பு 9-13 
பிரவிருத்திச் சக்கரம் 14-16 
ஆத்ம நிஷ்டனுக்குக் கர்மமில்லை 17-18 
சாதனதசையில் இருப்பவன் செய்யவேண்டியது 19-26
அஹங்காரத்தை அகற்றும் விதம் 27-32 
சுபாவத்துக்கு ஏற்ற சாதனம் 33-35
பாபத்துக்குப் பிறப்பிடம் 36-43.

நான்காம் அத்தியாயம் [ ஞானகர்ம ஸந்யாஸ யோகம் ]

ஞானகுரு சிஷ்ய பரம்பரை 1-3 
அவதார மூர்த்தியின் மஹிமை 4-9
ஞானயோகத்தின் சிறப்பு 10
எல்லா மார்க்கங்களும் இறைவனைப் போய்ச் சேர்கின்றன 11
சிறு தேவதைகளின் வழிபாட்டின் பயன் 12
நான்கு வர்ணமும் கர்மமும் 13-15 
கர்ம தத்துவம் 16-22 
விதவிதமான யக்ஞங்கள் 23-33
குரு சிஷ்ய இணக்கம் 34 
ஞானத்தின் உயர்வு 35-39 
சந்தேகம் உதவாது 40-42.


ஐந்தாம் அத்தியாயம் [ ஐந்தாம் அத்தியாயம் ]

கர்மயோகமே கர்ம ஸந்யாஸமாகிறது 1-13 
கர்மம் பிரகிருதிக்கு உரியது; ஆத்மாவுக்கு கர்மம் இல்லை 14-17 
சமதிருஷ்டி ஞானத்தின் விளைவு 18-19 
விஷய சுகம் வேறு, பிரம்ம சுகம் வேறு 20-29.


ஆறாம் அத்தியாயம் [ தியான யோகம் ] 

யோகமும் ஸந்யாஸமும் ஒன்றே 1-9 
யோகத்துக்கு ஏற்ற சூழ்நிலை 10-11 
யோகம் பயிலும் முறை 12-15
முன்னேற்றத்துக்கு நிபந்தனைகள் 16-20
யோகத்தில் முன்னேற்றம் 21-28
யோக ஸித்தி 29-32
அடங்காத மனதை அடக்கவேண்டும் 33-36
யோகப்பிரஷ்டனது கதி 37-45
யோகம் ஒப்பற்றது 46-47.


ஏழாம் அத்தியாயம் [ ஞானவிக்ஞான யோகம் ]

ஈசனும் அவருடைய சேதன அசேதன பிரகிருதிகளும் 1-7 
பூதங்களின் தன்மாத்திரைகளாயிருப்பவர் ஈசன் 8-9 
உயிர்களின் சிறப்புகள் ஈசனிடத்திருந்து வந்தவை 9-12 
முக்குண மயமான மாயை 13-15 
நான்குவித நல்லார்கள் 16-19 
சிறு தேவதைகளிடம் காமிய உபாஸனை 20-23 
பகவானது பாங்கு 24-26 
அறிவிலிகளும் அறிஞரும் 27-30.

எட்டாம் அத்தியாயம் [ அக்ஷரப்ரஹ்ம யோகம் ]

சகுண பிரம்ம உபாஸனை 1-8 
மரணத்தின்பொழுது இருக்க வேண்டிய மனநிலை 9-13
மீண்டும் பிறவாநிலை 14-16 
சிருஷ்டி கர்த்தாவின் இரவுபகல் 17-19 
மரணமிலாப் பெருநிலம் 20-22 
ஒளி மார்க்கமும் இருள் மார்க்கமும் 23-26 
யாண்டும் யோகியாயிரு 27-28.

ஒன்பதாம் அத்தியாயம் [ ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் ]

சகுண பிரம்மத்துக்கும் பிரகிருதிக்குமுள்ள தொடர்வு 1-10 
அறிவிலிகளது தரம் 11-12 
பக்தர்களது போக்கு 13-15 
அனைத்துமாயிருப்பவன் ஈசன் 16-19 
போகப்பிரியர்களின் பாங்கு 20-21 
வந்தனைக்கேற்ற விளைவு 22-25 
இறைவணக்கம் மிக எளிது 26-28 
நடுநிற்கும் இறைவன் இறைஞ்சுவார்க்கு எளியன் 29-34.

பத்தாம் அத்தியாயம் [ விபூதி யோகம் ]
 அனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6 
ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9 
அதனால் புத்தியோகம் உண்டாகிறது 10-11 
தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18
தமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40
விபூதிகளின் ஸாரம் 41-42.

பதினோன்றாம் அத்தியாயம் [ விச்வரூபதர்சன யோகம் ]
 அர்ஜுனனது வேண்டுதல் 1-4 
ஞானக்கண்ணை வழங்குதல் 5-8 
அனைத்தும் ஈசன் எனத் தொகுத்துக் காணுதல் 9-14 
தான் கண்ட விசுவரூபத்தை அர்ஜுனன் விளக்கியுரைத்தல் 15-31
கால சொரூபியாகிய ஈசன் தமது செயலைத் தாமே செய்துமுடிக்கிறார் 32-34 
அர்ஜுனன் செய்கிற ஸ்துதி 35-44 
அர்ஜுனன் விசுவரூபதர்சனம் தனக்குப் போதுமென்றது 45-46
அர்ஜுனனுக்குக் கிட்டிய தனி வாய்ப்பு 47-49 
மீண்டும் எடுத்த சாந்த சொரூபம் 50-51
வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டிய முறை 52-55.

 பன்னிரண்டாம் அத்தியாயம் [ பக்தி யோகம் ]
சகுண நிர்க்குண பிரம்ம உபாஸனைகள் 1-5 
சகுண பிரம்ம உபாஸனை முறைகள் 6-12 
பக்தனது பேரியல்புகள் 13-20.

பதின்மூன்றாம் அத்தியாயம்  [ ஷேத்ர ஷேத்ரக்ஞ விபாக யோகம் ]
இருப்பதெல்லாம் பிரகிருதி புருஷன் மயம் 1-3
இவைகளைப்பற்றிய உண்மை வெளியாகிய விதம் 4 
ஷேத்ரதிரத்தின் பாகுபாடுகள் 5-6 
ஞானத்துக்கு ஏதுவாயிருப்பவைகள் 7-11 
பிரம்மம் எத்தகையது 12 
ஞானபரிபாகத்தின் விளைவு 13-15
ஒன்று பலவாகத் தோன்றுகிறது 16-17 
பக்தியினின்று ஞானம் வருகிறது 18 
புருஷனும் பிரகிருதியும் யாண்டும் உள 19-20
பிறவிக்கு வித்து 21 
பிரம்மஞானம் பிறவிப் பெருங்கடலை அகற்றுகிறது 22-23
நான்கு யோகங்கள் 24-25 
ஒன்று என்று அறிவது முக்தி 26-28 
கர்மம் பிரகிருதிக்கு உரியது 29-30 
பிரம்மம் தன் மயம் 31-34.

பதினான்காம் அத்தியாயம் [ குணத்ரய விபாக யோகம் ]

பிரம்ம ஞானம் மோக்ஷத்துக்கு ஏதுவாகிறது 1-2 
பிறவிக்கு மூலகாரணம் 3-4 
குணங்களின் செயல் 5-10 
குணங்களின் முன்னீட்டத்தை அறிவது எப்படி 11-18
குணாதீதம் முக்தி நிலை 19-20 
குணங்களைக் கடந்தவனது லக்ஷணம் 21-27.

பதினைந்தாம் அத்தியாயம்  [ புரு ஷாத்தம யோகம் ]

ஸம்ஸார விருக்ஷம் 1-2 
மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 
எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 
பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 
ஜீவதத்துவ விளக்கம் 7-9 
ஞானக்கண் 10-11 
பரமாத்மனது சொரூபம் 12-15 
ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.

பதினாறாம் அத்தியாயம்  [  தெய்வாசுர சம்பத் விபாக யோகம் ]

தெய்வீக இயல்பு 1-3 
அஸுர இயல்பு 4 
இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6 
அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18 
ஆஸுரனது வீழ்ச்சி 19-21
அஸுர இயல்பினின்று விடுதலை 22 
சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.

பதினேழாம் அத்தியாயம் [ சிரத்தாத்ரய விபாக யோகமக்டோபர் ]

மூன்றுவித சிரத்தை 1-7 
மூன்றுவித உணவு 8-10 
மூன்று வித ஆராதனை 11-13
மூன்றுவிதத் தபசு 14-19 
மூன்றுவித தானம் 20-22 
குறைகளை நிறையாக்குதல் 23-28.

பதினெட்டாம் அத்தியாயம் [ மோஷ சந்நியாச யோகம் ]
ஸந்யாஸத்துக்கும் தியாகத்துக்கும் விளக்கம் 1-6 
தாமஸ, ராஜஸ தியாகம் உதவாது 7-8 
ஸாத்விக தியாகம் வேண்டும் 9-12 
கர்மத்துக்கு ஹேதுக்களாவன 13-16 
ஆத்மாவுக்குக் கர்மம் இல்லை 17 
முக்குணங்கள் கர்ம வகைகளுக்கு வேகம் தருகின்றன 18-40 
நான்கு வர்ண தர்மத்தின் விளக்கம் 41-48
கர்மயோகமே கர்மஸந்யாஸமாகிறது 49-57 
அஹங்காரம் கொடியது 58-60 
எல்லாம் ஈசன் செயல் 61-62 
உண்மையை அலசி ஆராய்தற்கு அனுமதி 63 
சரணாகதி தத்துவம் 64-66 
கீதைக்கு அதிகாரி யார்? 67-71
ஞானோதயம் 72-73 
ஸஞ்ஜயர் முடிவுரை 74-78.


பகவத்கீதை - அத்தியாயம் விபரம்
arrow முதல் அத்தியாயம்arrow  இரண்டாம் அத்தியாயம்
arrow மூன்றாம் அத்தியாயம்arrow நான்காம் அத்தியாயம்
arrow ஐந்தாம் அத்தியாயம்arrow ஆறாம் அத்தியாயம்
arrow ஏழாம் அத்தியாயம்arrow எட்டாம் அத்தியாயம்
arrow ஒன்பதாம் அத்தியாயம்arrow பத்தாம் அத்தியாயம்
arrow பதினோன்றாம் அத்தியாயம்arrow பன்னிரண்டாம் அத்தியாயம்
arrow பதின்மூன்றாம் அத்தியாயம்arrow பதினான்காம் அத்தியாயம்
arrow பதினைந்தாம் அத்தியாயம்arrow பதினாறாம் அத்தியாயம்
arrow பதினேழாம் அத்தியாயம்arrow பதினெட்டாம் அத்தியாயம்
arrow ஸ்ரீ கீதா மஹாத்மியம்


தொடரும்...


நன்றி வணக்கம் 
ஹரிமணிகண்டன்
 Harimanikandan.V
H/P   :+91 9841267823

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி ,
 நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்


(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

1 comment:

  1. MISSING நான்காம் அத்தியாயம் [ ஞானகர்ம ஸந்யாஸ யோகம் ]

    ReplyDelete